Kallai mattum Kandal Kadavul theriyathu. - Song from Dasavatharam.
I have become mad of it. I am listening to it atleast 50 times a day after the audio launch. Good music and amazing Lyrics by Kavignar Vaali.
Here it goes....
My most favourite lines are in RED.
ஓம் நமோ நாராயணாய !!!!!!!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது (2)
எட்டில் ஐந்து ஏன் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு ஏன் கழியாது
அஷ்ட அக்ஷரம் ஏற்கும் நெஞ்சு பஞ்ச அக்ஷரம் பார்காது
மூடர் கண்ணில் பார்த்தல் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தல் யாவும் சுற்றம் தான்
இல்லை என்று சொன்ன பின்னும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது (2)
வீர சைவர்கள் உன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜ லக்ஷ்மி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணு தாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ ராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
(Vaali's original name is ரங்கராஜன்)
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது (2)
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தல் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தல் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
~ கவிஞர் வாலி
Thanks Vaali for these wonderful lines. No lyricist in Tamil film industry can match them.
All the very Best to the Dasavatharam team.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment